தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வால்பாறை அருகே சிறுத்தைகள் நடமாட்டம்; பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தல்

வால்பாறை அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக செல்லும்படி வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Movement of leopards near Valparai and Forest department advice to travel safely
Movement of leopards near Valparai and Forest department advice to travel safely

By

Published : Nov 24, 2022, 2:35 PM IST

கோவை:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட கேரளா எல்லையான மழுக்குப்பாறை - அதிரப்பள்ளி போகும்வழியில் உள்ள பத்தடி பாலம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாடிக் கொண்டிருப்பதை அவ்வழியாகச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பார்த்துள்ளனர்,

சிறுத்தை அதே இடத்தில் நீண்ட நேரமாக உலாவுவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் மழுக்கு பாறை வனத்துறை சோதனைச் சாவடிக்கு வாகன தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிரப்பள்ளி செல்லும் வாகன ஓட்டிகளிடம் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்றும்; அவ்வழியாக யாரும் செல்ல வேண்டாம் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பகலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் சிறுத்தையை சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: குன்னூர் வெடிமருந்து தொழிற்சாலை தீ விபத்து; 2 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details