கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள மாப்பிள்ளைகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (45). இவரது மனைவி சத்தியபிரியா (30) இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த சிறுவன் வீட்டில் அடிக்கடி டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வன் சிறுவனைக் கண்டித்துள்ளார். அடிக்கடி டிவி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும், அப்போதுதான் படிக்க முடியும் என மகனை கண்டிக்கும்போது, மகனை கண்டிக்க வேண்டாம் என தமிழ்ச்செல்வனின் மனைவி சத்தியா கணவரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, கணவர் தமிழ்செல்வனுக்கும் மனைவி சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதுய இதைக்கண்ட சத்தியாவின் தாய் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.
ஆனால், தமிழ்ச்செல்வன் தங்களது குடும்ப தகராற்றில் நீங்கள் தலையிட வேண்டாம் எனக் கூறி மாமியாரைக் கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த சத்யாவின் தாய் மரகதம் (50), தனது கணவரான தண்டபாணியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மரகதம், தண்டபாணி ஆகிய இருவரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.