தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாய்ப்பால் தான் முதல் நோய்த்தடுப்பு மருந்து! - தாய்ப்பால்

கோவை: பொள்ளாச்சியில் நடைபெற்ற தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு அரசு மகப்பேறு மருத்துவர்கள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர்.

மகப்பேறு மருத்துவர்கள்

By

Published : Aug 2, 2019, 11:25 PM IST

ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலகம் முழுவதும் தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இந்தாண்டுக்கான தாய்ப்பால் வார விழாகொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மருத்துவர்கள், தன்னார்வலர்கள், ஏராளமான தாய்மார்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தாய்ப்பால் வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர்கள் அறிவுரைகளை வழங்கினர்.

இதுகுறித்து பேசிய மகளிர் மகப்பேறு மருத்துவர்கள், “குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் சிறந்த உணவு. அதைத் தவிர்த்து, மாட்டுப் பால், பவுடர் பால் வழங்கினால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும், நோய் எதிர்ப்பு சக்தியும் குறையும். தாய்ப்பால் வழங்காவிட்டால் வயிற்றுப் போக்கு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும்.

மகப்பேறு மருத்துவர்கள்
தாய்ப்பாலில் புரோட்டின் சத்து அதிகளவு உள்ளதால் குழந்தைகள் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ள தாய்ப்பால் தான் குழந்தைகளுக்கு முதல் நோய்த்தடுப்பு மருந்து. சிறந்த உணவான தாய்ப்பால் குழந்தைகளின் உரிமை. எனவே, தாய்மார்கள் குழந்தைகளுக்கு அவசியம் தாய்ப்பால் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details