கோயம்புத்தூர்: குனியமுத்தூர் ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மாசிலாமணி. ரமேஷ் திருமணங்களுக்கு அலங்காரம் செய்யும் பணி செய்து வருகிறார். மாசிலாமணி அப்பகுதியில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளது. மூத்த மகளக்கு திருமணமான நிலையில் இளைய மகள் தாரணி இருக்கிறார்.
தாரணி அருகில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் மாசிலாமணிக்கு பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இதற்காக பணி முடிந்ததும் அருகிலுள்ள உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் சிவக்குமாரிடம் பளுதூக்கும் பயிற்சி பெற்று வந்தார். இதை பார்த்த அவரது மகள் தாரணிக்கும் தாய் போல் பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நாள்தோறும் பயிற்சி பெற்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திருச்சியில் நடந்த மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் 63 கிலோ எடைப்பிரிவில் 77.5 கிலோ எடை தூக்கி தங்கப் பதக்கம் வென்று மாசிலாமணி சாதனை படைத்தார். மேலும் அவருடைய 17 வயது மகள் தாரணி 47 கிலோ பிரிவில் 72.5 கிலோ எடை தூக்கி வெண்கலம் வென்றார். இது குறித்து மாசிலாமணி கூறுகையில், “நான் வீட்டு வேலைக்குச் சென்று வந்த நிலையில் தொலைக்காட்சி பார்க்கும்போது அதில் பழுதுதூக்கும் போட்டியை பார்த்து ஆர்வம் ஏற்பட்டது.