பொள்ளாச்சி அருகே உள்ள ஒக்கிலிபாளையம் கிராமத்தில் திமுக சார்பாக சபரிமாலா பரப்புரை மேற்கொண்டார்.
அதில் பொள்ளாச்சியில் பாலியல் ரீதியாக அதிக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சபரிமாலா பேசினார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த நபர்கள் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? இதனால் எங்கள் பகுதியில் உள்ள பெண்களுடைய திருமண வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்கள்.
இப்படி மாறிமாறி ஒருவருக்கொருவர் பேசும்பொழுது சபரிமாலாவுடன் வந்த திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த சுமார் 20 நபர்களுக்கு மேலானோர் அவர்களைக் கீழே தள்ளி விட்டு அடித்து மிதித்ததாக கூறப்படுகிறது.
அதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தற்போது பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து அறிந்து, பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் ஜெயராமன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க:அரசியல் ஆசையை வெளிப்படுத்திய வைகோ மகன்