கோயம்புத்தூர்: ரோட்டரி டெக்ஸ்சிட்டி சார்பில் போதைப்பொருள் தவிர்த்தல், பாதுகாப்பான பயணம் உள்ளிட்டவைகளை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் Yuva India 2022 நிகழ்ச்சி வரும் 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் சமீரன் பேட்டி இந்த நிகழ்ச்சியினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், "நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மூன்று நாட்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. போதை பொருளை தடுப்பது, பாதுகாப்பான போக்குவரத்து பயணம் மேற்கொள்வது இதன் முக்கிய அம்சமாக உள்ளது.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். பவானி ஆற்றோரம், மேட்டுப்பாளையத்தில் உள்ள சில பகுதிகள், வால்பாறை மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பகுதிகள் என 16 இடங்களை அபாயகரமான பகுதிகளாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.
உள்ளாட்சி அமைப்புகள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் 85 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. தீயணைப்புத் துறைகளுடன் இணைந்து செயல்பட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட எல்லைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் எதிரொலியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாளையார் செக் போஸ்டில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்துக்குரியவைகள் திருப்பி அனுப்பப்படுகிறது. கோவையில் பறவைக்காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இல்லை. தண்ணீரை உறிஞ்செடுக்கும் உயரிய கருவிகள் தயாராக உள்ளது" என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், "மாணவர்களிடையே ஏற்படும் போதை பழக்கத்தை தடுக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம். இதில் முதல் கட்டமாக 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய குறும்படங்களை தயாரித்து அனுப்பியுள்ளனர். மேலும் கூடுதலாக மாணவர்கள் போதைக்கு எதிரான குறும்படங்களை எடுத்து அனுப்புவார்கள்" என்றார்.
இதையும் படிங்க: அண்ணாமலைக்கு பதில் சொல்லி அவரை பெரிய ஆளாக மாற்ற விரும்பவில்லை - அமைச்சர் ரகுபதி