தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் உயிரிழக்கும் அபாயம்!

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் சாலையோரம் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம்!
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம்!

By

Published : May 29, 2022, 10:42 PM IST

பொள்ளாச்சி: ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டு ஆறுவனசரகங்கள் உள்ளன. 956 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட வனப்பகுதி ஆகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, கருசிறுத்தை, காட்டு மாடு, வரையாடு, புள்ளிமான் மற்றும் அபூர்வ பறவைகள், தாவரங்கள் உள்ளன.

வால்பாறை செல்லும் வழியில் கவியருவி, 9ஆவது கொண்டை ஊசி வளைவுவில் உள்ள காட்சி முனை பகுதிகளில் ஏராளமான குரங்குகள் உள்ளது. வால்பாறைக்கு தமிழகம் மற்றும் கேரளா என பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்கின்றனர்.சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்களை சாலையோரமாக இருக்கும் குரங்குகளுக்கு கொடுக்கின்றனர்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதியில் குரங்குகளுக்கு உணவு அளிப்பதால் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம்!

இதனால் சாலையில் குரங்குகள் உணவு அருந்துவதால் வால்பாறையில் இருந்து வரும் வாகனங்கள் சாலையில் அதிவேகத்துடன் வருவதால் குரங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு குரங்குகளுக்கு உணவளிக்கும் நபர்கள் மீது அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க :Viral Video: அணையில் நீச்சலடித்த காட்டு யானைகள்...

ABOUT THE AUTHOR

...view details