வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குரங்கு அருவியில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். பின்பு 14 நாட்களுக்குப் பிறகு பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தடுப்புகள் இல்லாத குரங்கு அருவி - சுற்றுலாப் பயணிகள் அச்சம்!
கோயம்புத்தூர் : பொள்ளாச்சி குரங்கு அருவியில் பாதுகாப்பு தடுப்பு கம்பிகள் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் செலவில் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன. இருப்பினும், தற்போது மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அந்த தடுப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் குளிக்க பாதுகாப்பு இல்லாததால் சுற்றுலாப் பயணிகள்அச்சத்துடன் உள்ளனர்.
இதுகுறித்து, வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதின் காரணமாக மழை வெள்ளத்தில் தடுப்பு கம்பிகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. ரூபாய் 10 லட்சம் செலவில் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைத்திட கூறி, அரசுக்கு தெரிவித்துள்ளோம், விரைவில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.