தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் ஓபிஎஸ் கூட்டத்திற்காக பெண்களுக்கு பணப்பட்டுவாடா - Money Issue

கோவை: பொள்ளாச்சியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரப்புரை கூட்டத்திற்காக அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்ததையடுத்து, அரசு பள்ளி வளாகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

பெண்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள்

By

Published : Apr 2, 2019, 8:19 PM IST

தமிழ்நாடு முழுவதிலும் மக்களவைத் தேர்தல் பரப்புரைகளைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மகேந்திரன் என்பவரை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்றார்.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை அதிமுக பிரமுகர்கள் அழைத்து வந்திருந்தனர். அந்த பெண்களுக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வைத்து பணம் பட்டுவாடா நடப்பதாக அப்பகுதி மக்கள் புகார் அளித்தனர்.

பெண்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட போலி ரூபாய் நோட்டுக்கள்

இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமார், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது பெண்களுக்கு டோக்கனாக வழங்கப்பட்ட போலி ரூபாய் நோட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் துணை முதலமைச்சர் பிரச்சாரத்திற்காக பெண்கள் அழைத்து வரப்பட்டு பணம் பட்டுவாடா செய்வதற்காக டோக்கன் வழங்கிய விவகாரம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details