கோயம்புத்தூர்:மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் நாளை பிறந்த நாள் காண்கிறார். இந்நிலையில், கோவை ரயில் நிலையம் லங்கா கார்னர் பகுதியில் மத்திய மாவட்ட மக்கள் நீதி மய்யத்தினர் நவம்பர் 7இல் பிறந்தநாள் காணும் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளைத்தெரிவிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
'மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே...!' - வைரல் ஆகும் கமல் போஸ்டர் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நாளை பிறந்த நாள் கொண்டாடவிருக்கும் நிலையில், அவரைப் புகழ்ந்து அவரது கட்சித்தொண்டர்கள் போஸ்டர் அடித்து வருகின்றனர்.
’மதம் வைத்து அரசியல் செய்பவரை பதம் பார்க்க வந்தவரே...!’ - கமலுக்கு போஸ்டர்
அந்தப் போஸ்டரில் "மனிதனை மனிதனா பாரு, மதங்களும் தன்னால ஓடும் எனவும், மதம் வைத்து அரசியல் செய்பவரை, பதம் பார்க்க வந்தவரே நம்மவரே! நீ வாழ்க பல்லாண்டு" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டரை படம் எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு ...என்ஐஏ அதிகாரிகள் விசாரணை