கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது தீவிர பரப்புரைக்கு நடுவே இன்று சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள கெளமார மடாலயத்திற்கு சென்று சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளை சந்தித்தார்.
சிரவை ஆதினத்தை சந்தித்த கமல்ஹாசன் - மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்
கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
mnm chief Kamalhassan meets Srivai Aadinam
கமல்ஹாசனை வரவேற்றும் அவருக்கு நன்றி தெரிவித்தும் கெளமார மடாலய புத்தகம் ஒன்றை வழங்கினார். பின்னர், கமல்ஹாசன் பார்வையாளர்கள் பதிவேட்டில் கையொப்பமிட்டு, அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த ஒரு சில நாள்களுக்கு முன்பு கமல்ஹாசன் பேரூர் ஆதினம் மருதாச்சல அடிகளாரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.