கோவை:கடந்த மூன்று நாள்களுக்கு முன் ராம்நகர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் இந்துக் கடவுள்கள்போல் வேடமணிந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பழனிக்குமார் என்பவர் இது குறித்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதுமட்டுமின்றி, மக்கள் நீதி மய்யம் கட்சியினரின் இச்செயல் கடவுளே எதிரே வந்து வாக்குச் சேகரிப்பதுபோல் உள்ளது. இதுபோன்று கடவுள்களின் வேடமணிந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுவது தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் எனக் கூறியிருந்தார்.
எனவே சுயேச்சை வேட்பாளரின் புகாரின் அடிப்படையில் காட்டூர் காவல் துறையினர் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மீது தேர்தல் விதிமீறல் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.