தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய்மைப் பணியாளர்கள் அலுவலகத்தில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆய்வு - cleaning staff office in coimbatore

காட்டூரில் தூய்மைப் பணியாளர்கள் அலுவலகத்திற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேரில் சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வுமேற்கொண்டார்.

coimbatore
வானதி சீனிவாசன்

By

Published : Jun 15, 2021, 1:58 PM IST

கோவை: காட்டூர் பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அலுவலகத்தை, தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் சென்று பார்வையிட்டார். அங்கிருக்கும் அடிப்படை வசதிகள் குறி்த்து ஆய்வுமேற்கொண்டார்.

அப்போது, அங்கிருந்த தூய்மைப் பணியாளர்கள், இங்கு கழிவறை வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என்றும், பல ஆண்டுகளாகத் தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆய்வு

தொடர்ந்து, தற்காலிக பணியாளர்களாக எத்தனை ஆண்டுகளாகப் பணி செய்துவருகிறீர்கள் போன்ற விவரங்களைக் கேட்டறிந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன், பணி நிரந்தரம் செய்வது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், அவர்களுக்கு வழங்கப்படும் உணவையும் வாங்கி சாப்பிட்ட அவர், தரமான உணவு கிடைத்திட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details