தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க முதலமைச்சர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறார்’ - உதயநிதி - MLA udhayanidhi on madurai aiims

கோவை : மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

mla-udhayanidhi-on-madurai-aiims
mla-udhayanidhi-on-madurai-aiims

By

Published : Jun 11, 2021, 8:56 PM IST

புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்

எய்ம்ஸ் மருத்துவமனை:

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள கால தாமதம் ஆகிறது.

இதுகுறித்து அப்போதைய மாநில அரசும், ஒன்றிய அரசும் பொய் கூறிவந்த நிலையில் வெகு விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் லாக்டவுன் ஜூன் 21 வரை நீட்டிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details