கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சியின் வழக்கறிஞர் அணியின் சட்ட அலுவலகத்தை, முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அக்கட்சியின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இரண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தின் சேவைகளையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோயம்புத்தூர் அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்களுக்கான தனி அலுவலகத்துடன் கூடிய நூலகம் திறக்கப்பட்டுள்ளது.
எஸ்.பி. வேலுமணி எம்.எல்.ஏ பேட்டி கோயம்புத்தூரில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வெற்றியை பெற்றுத்தந்த மக்களுக்காக, இரண்டு இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதிமுகவை இபிஎஸ்ஸும், ஓபிஎஸ்ஸும் சிறப்பாக வழிநடத்துகின்றனர்.
ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்த எம்.எல்.ஏ தமிழ்நாட்டில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக இருந்து, மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்தும்” என்றார்.
இதையும் படிங்க:’தமிழர்களை சாதிரீதியாக கூறுபோடுவதை அனுமதிக்க முடியாது’ - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்!