தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை ஆய்வு செய்த எஸ்.பி.வேலுமணி - அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் பகுதிக்கு உள்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

mla
mla

By

Published : May 22, 2021, 10:02 PM IST

கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட பூலுவபட்டி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார்.

அப்போது இந்த சுகாதார நிலையங்களுக்கு வரும் மக்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும் இப்பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான தகவல்களையும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: கோவையில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு இல்லை - எஸ்.பி. வேலுமணி

ABOUT THE AUTHOR

...view details