கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் சோதனைச் சாவடியில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் அமுல் கந்தசாமி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
பின் சுற்றுலா பயணிகளிடம் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அறிவித்திருக்க வேண்டும் எனவும்; வனப்பகுதிக்குள் தாங்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்குடன் இருக்கும் பொருட்களை வனத்திற்குள் வீசக்கூடாது எனவும் தெரிவித்தார். மேலும், வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியும்; வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்து வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்,பிளாஸ்டிக் பொருட்களையும் பார்வையிட்டார்.
சோதனைச்சாவடியில் ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். இதில் 21ஆவது வார்டுசெயலாளர் சிவசாமி மற்றும் வனத்துறையினர் வேட்டைத்தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.
ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: ஆனைமலை புலிகள் காப்பக சோதனை சாவடியில் எம்.எல்.ஏ ஆய்வு முன்னதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில், சுற்றுலாப்பயணிகள் அதிகம் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதிக்குள் வீசி எறிந்து சென்று வருகின்றனர் என்று செய்தி வெளியிடப்பட்ட நிலையில், இதுகுறித்து அப்பகுதி எம்.எல்.ஏ ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக, பாஜக இடையே எந்த வித குழப்பமும் இல்லை - அண்ணாமலை அதிரடி