கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வனத்தை விட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெறியேறிய ஒற்றை காட்டு ரஞ்சனி, மாகாளி என இரண்டு பேரைக் கொன்றது.
யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ - MLA
கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை குடியிருப்பில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகைக்கான காசோலையை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.
யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதில் மீதமுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுதாரர்களிடம் வழங்கினர்.
முன்னதாக நேற்று அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை திருமலைசாமி என்பவரது வீட்டை இடித்து தள்ளியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். அப்போது அந்த வீட்டை பார்வையிட சென்ற வால்பாறை எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.