கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் என்ற பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த சுவர் குறித்து பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இத்தனை பேர் உயிரிழந்திருப்பதற்கு காரணம் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கொதிக்கின்றனர்.
இந்நிலையில், திமுக தலைவரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று அப்பகுதியை ஆய்வு செய்தார். அப்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘சுவர் பழுதடைந்துள்ளது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பல முறை புகார் கொடுத்து இருக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. அரசு, அமைச்சர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் 17 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.