இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், கோவையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஜனநாயகம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுக்கிறது. அதேசமயம் போராட்டம் நடத்துவதற்கு வாய்மொழியாக அனுமதி கொடுத்துவிட்டு பின்னர் வழக்கு தொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருப்பதை வரவேற்பதாக தெரிவித்த அவர், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்படுமா என்பது குறித்து முதலமைச்சர் விளக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.