தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயதான தம்பதிக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சர் - உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி

கோவை: உணவுப் பொருள்கள் வாங்க முடியாத வயதான தம்பதிக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார்.

நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர்
நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர்

By

Published : May 1, 2020, 11:24 AM IST

கோவையில் பல்வேறு இடங்களில் நிவாரண பொருள்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கரோனா நிவாரணம் வழங்கிவருகிறார்.

கோவை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கண்ணம்மாள் அவருடைய கணவர் மருதாசலம் ஆகியோர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததுள்ளனர்.

மேலும் அவர்கள் உணவுப் பொருள்கள்கூட வாங்க முடியாமல் உள்ளது குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு அப்பகுதி மக்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வயதான தம்பதிக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சர்

பின்னர் உடனடியாக மூதாட்டி கண்ணம்மாள் வீட்டிற்குச் சென்று அவருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். மேலும் அந்த மூதாட்டிக்கு ஆறுதல் தெரிவித்த அவர் உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள் எப்பொழுதும் இருப்போம் என உறுதியளித்தார்.

மேலும் அந்தப் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குச் சென்று நிவாரணப் பொருள்களை வழங்கியது, அந்தப்பகுதி பொதுமக்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்கள் தடையின்றி வழங்கப்படுகிறது- சென்னை ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details