கோயம்புத்தூர்:திருமலையம்பாளையம் அருகில் நஞ்சப்பனூரைச் சேர்ந்தவர், பழங்குடியின மாணவி சங்கவி. சாதிச் சான்றிதழ் இல்லாமல் நீட் எழுத முடியாமல் சிரமப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி 202 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.
நீட் தேர்வில் பழங்குடியின மாணவி வெற்றி
இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, மாணவியை நேரில் சந்தித்தார்.
மாணவிக்கு லேப்டாப் வழங்கி அமைச்சர் பாராட்டு அப்போது அவர் படிக்க மடிக்கணினி ஒன்றை வழங்கிப் பாராட்டினார். இதனையடுத்து அங்கிருந்த குடியிருப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், தேவையான வசதிகளை செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:அமெரிக்காவைக் கலக்கும் இருளர்கள் - ஆச்சரியமளிக்கும் இரட்டையர்