கோவை தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளக்காபாளையம், குரும்பபாளையம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் வாக்கு சேகரித்தார்.
பரப்புரையில் பேசிய அவர், ” உள்ளாட்சித் தேர்தலை சட்டப்பூர்வமாக நடைபிணமாக மாற்றிவிட்டவர் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. அவர் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும், தனது பணப்பெட்டியை நிரப்பிக் கொள்வதற்கும் மூன்றாண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடக்காமல் செய்தார். அவர் தேர்தல் காலங்களில் மட்டும் கிராமப்புற மக்களிடம் வந்து செல்கிறார்.