இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "கோயம்புத்தூரில் இதுவரை 9 ஆயிரத்து 344 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் 9 லட்சத்து 90 ஆயிரத்து 317 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோயம்புத்தூரில் இதுவரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 806 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது வரை 19 ஆயிரத்து 479 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
'சிறப்பு நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்பு குறைப்பு' - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவமனை
கோயம்புத்தூர்: முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் உயிரிழப்பு குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அதில் தற்பொழுது வரை 15 ஆயிரத்து 635 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 314 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் 232 பேர் கோவை அரசு மருத்துவமனையிலும் 51 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் 37 பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையிலும் 28 பேர் மதுக்கரை அரசு மருத்துவமனையிலும் 1, 020 பேர் தனியார் மருத்துவமனை, மையங்களிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அறிகுறி இல்லாத வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 579 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் வைரஸ் தொற்று சிகிச்சை அளிப்பதற்கு 9 ஆயிரத்து 178 சிறப்பு படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதிகள், ஊரகப் பகுதிகள் என அனைத்து மண்டலங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர் முன்னிலையில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.