தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கில் தேர்தலுக்காக அரசியல் செய்ய கூடாது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முக ஸ்டாலினும் திமுகவினரும் ஆதாரம் இல்லாமல் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இது மனசாட்சி இல்லாத செயல். எங்களுடைய கட்சிக்காரராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

pollachi case
pollachi case

By

Published : Jan 12, 2021, 10:07 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை வைத்து திமுக அரசியல் செய்கிறது என அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் எஸ் பி வேலுமணி பொங்கல் நலத்திட்ட உதவிகளையும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலமைச்சர் எடப்பாடியார் கரோனா காலத்தில் மக்களுக்கு 2,500 ரூபாய் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினை வழங்கியுள்ளார்.

நேரடியாக அனைவரும் சந்திக்கக்கூடிய மனிதர் அவர். பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்கு முதலமைச்சர் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார். பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்ற கொடுமைகள் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும். யார் அந்த தவறு செய்திருந்தாலும் அது மன்னிக்க முடியாத குற்றம். ஆனால், தேர்தலுக்காக அதை வைத்துஅரசியல் செய்யக்கூடாது.

முக ஸ்டாலினும் திமுகவினரும் ஆதாரம் இல்லாமல் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றனர். இது மனசாட்சி இல்லாத செயல். எங்களுடைய கட்சிக்காரராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ABOUT THE AUTHOR

...view details