கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலை தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சி, பொன்னாபுரம் ஊராட்சி, தளவாய் பாளையம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உடுமலை தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் - Minister udumalai radhakrishnan
கோயம்புத்தூர்: உடுமலை தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஆய்வுசெய்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பல்வேறு கட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
udumalai radhakrishnan
முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி புதிய திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் பொள்ளாச்சி வட்டாட்சியர் தணிகைவேல், வால்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் விவேகானந்தன், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக் குழுத் தலைவர் லட்சுமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:புரெவி புயல் எதிரொலி - தென் தமிழ்நாட்டிற்கு எச்சரிக்கை