கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உலக மென்பொருள் சந்தை தளத்தில், தண்டோரா என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மென்பொருளை கால்நாடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் இந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஒருவருக்கு வேலைவாய்ப்பு ஆணையை அமைச்சர் வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 40 ஆண்டுகளாக வசித்து வந்த சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. உடுமலை பூக்களம் பகுதியில் 30 கோடி ரூபாயில் 320 குடியிருப்புகள் கட்டும் பணி முடிவடைந்தது. பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.