கோவை மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், மாக்கினாம்பட்டி ஊராட்சி, ஊஞ்ச வேலாம்பட்டி ஊராட்சி, கோமங்கலம் ஊராட்சி, சிஞ்சுவாடி ஊராட்சி ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு, பொதுமக்கள் ஒவ்வொருவரிடமும் நேரடியாக மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து பொதுமக்களின் மனுக்களுக்குத் தீர்வு கண்டார்.