தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம்..? அமைச்சர் உதயநிதி கேள்வி - காங்கிரஸ்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாக்கு சேகரிக்க விமானம் மூலம் கோவை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் சட்டம் ஒழுங்கிற்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம் என கேள்வி எழுப்பினார்.

Minister Udhayanidhi Stalin questioned what is the relationship between Annamalai and law and order
அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

By

Published : Feb 20, 2023, 9:08 PM IST

அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவு கட்சி தலைவர்கள் பலரும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிழக்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்த அவர் சாலை மார்க்கமாக ஈரோடு சென்றார்.

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'அதிமுகவினர் வாக்காளர்களுக்கு கொலுசு கொடுப்பதாக முன்வைக்கப்படும் கருத்துக்கு, மக்கள் தெளிவான முடிவில் இருக்கிறார்கள்' என பதில் அளித்தார். மேலும் திமுகவினர் மக்களை அடைத்து வைப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு வைப்பது குறித்த கேள்விக்கு, 'அவ்வாறு எதுவும் இல்லை' எனத் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் பிரசாரத்திற்கு வந்த பொதுமக்கள் கூட்டம் வாக்குகளாக மாறாது என அதிமுக கட்சியினர் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, 'பொறுத்திருந்து பார்க்கலாம்' எனப் பதிலளித்தார். சட்டம் ஒழுங்கு குறித்து அண்ணாமலை இடம் கேள்வி கேளுங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, 'அண்ணாமலைக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் என்ன சம்பந்தம் உள்ளது' கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: என்னை திமுகவினர் மிரட்டுனாங்க; அதனால் அதிக நிதி ஒதுக்குனேன் - தென்காசி ஊராட்சிக்குழு தலைவி ஓபன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details