தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் 2 வாரங்களுக்கு பிறகு கரோனா குறையும் - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

கோயம்புத்தூர்: மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்புகள் குறையும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 9, 2020, 7:14 PM IST

கோவையில் இரண்டு வாரத்திற்குள் கரோனா குறையும் -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!
கோவையில் இரண்டு வாரத்திற்குள் கரோனா குறையும் -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

கோயம்புத்தூர் மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கரோனா தடுப்பு மருந்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி. வேலுமணி, “கோவை மாவட்டத்தில் வெளி மாவட்டம், வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்களால் தான் கரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளன. கோவை மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்புகள் குறையும்.

கோவையில் இரண்டு வாரத்திற்குள் கரோனா குறையும் -அமைச்சர் எஸ்.பி. வேலுமணி!

கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஒன்பதாயிரம் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. கரோனா நோயாளிகளுக்கு தரமான சிகிச்சையும், சத்தான உணவும் வழங்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது - மதுரைக் கிளை

ABOUT THE AUTHOR

...view details