கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் காட்டம்பட்டி, ஜக்கார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, "கோயம்புத்தூரில் மு.க ஸ்டாலின் கலந்துகொண்ட கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பெண்ணிற்கு பதில் கூறமுடியாமல் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மகளிர் வாழ்வாதாரம் மேம்பட ரூ. 80 கோடி கடனுதவி அதிமுக சார்பில் மகளிர் வாழ்வாதாரம் மேம்பட 80 கோடி ரூபாய் கடனுதவி கடந்த 9 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு 2,500 ரூபாய் வழங்குவதை தடுக்க ஒருசிலர் முயற்சி செய்துவருகின்றனர். யார் தடுத்தாலும் பொங்கல் பரிசு வழங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் அதிமுக வெற்றிபெற தொண்டா்கள் பாடுபட வேண்டும்' - கே.பி.அன்பழகன்