கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதி கரும்பு கடை அன்பு நகர் பகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அமைச்சர் வாகனத்தின் முன்பு சென்றுகொண்டிருந்த தொண்டர் ஒருவர் திடீரென மயக்கம் அடைந்தார்.
மயக்கமடைந்த தொண்டரை ஆசுவாசப்படுத்திய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி! - கோயமுத்தூர் அண்மைச் செய்திகள்
கோயமுத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதியில் பரப்புரையின்போது மயக்கமடைந்த அதிமுக தொண்டரை, அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினார்.
மயக்கமடைந்த தொண்டரை ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் அமைச்சர் எஸ் பி வேலுமணி
இதனைப் பார்த்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பரப்புரை வேனிலிருந்து இறங்கி தொண்டரின் முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்தினார். பின்னர் தன்னுடன் வந்த காரில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பரப்புரையின்போது மயங்கிய நபரின் பெயர் ஆசாத் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க:பதறவைக்கும் பறக்கும் படை... கதறித் துடிக்கும் வர்த்தகர்கள்!