தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு நகரும் வண்டியை வழங்கிய அமைச்சர்! - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோயம்புத்தூர்: முதுகு தண்டுவட பாதிப்பு பாதிக்கப்பட்ட 50 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.

sp velumani
sp velumani

By

Published : Sep 24, 2020, 3:29 PM IST

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.

முன்னதாக மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட 50 மாற்றுத்திறனாளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகளை வழங்கினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

முதற்கட்டமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருவருக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள வாகனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லத்திற்கு சென்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பப்ஜி காதலனைக் கரம்பிடித்த 20 வயது மாணவி!

ABOUT THE AUTHOR

...view details