தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சி மன்றக் கட்டடத்தை திறந்துவைத்த அமைச்சர் எஸ்பி வேலுமணி! - Panchayat Council building

வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆனைமலை பகுதியில் உள்ள கம்மாளப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பாலம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் ஆகியவற்றை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்துவைத்தார்.

பொள்ளாச்சி செய்திகள் எஸ்பி வேலுமணி வேலுமணி Minister SP Velumani inaugurates Panchayat Council building SP Velumani Panchayat Council building Pollachi news
பொள்ளாச்சி செய்திகள் எஸ்பி வேலுமணி வேலுமணி Minister SP Velumani inaugurates Panchayat Council building SP Velumani Panchayat Council building Pollachi news

By

Published : Jan 20, 2021, 3:34 AM IST

பொள்ளாச்சி: வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட ஆனமலை, கம்பாலப்பட்டி ஊராட்சியில் பாலாறு அருகில் 4 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்தை மக்களின் பயன்பாட்டிற்காக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்துவைத்தார்.
புதிதாக திறக்கப்பட்ட இந்தப் பாலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு வணிகர்களும், விவசாய பெருங்குடி மக்களும், இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் பயனடையும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

அமைச்சர் எஸ்பி வேலுமணி
மேலும் கம்மாளப்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகத்தையும் அமைச்சர் திறந்துவைத்தார். பின்னர் தேவிபட்டினம் பகுதியில் மினி கிளினிக் திறந்து வைத்து நடைபெற்ற விழாவில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை என 250க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
தேவிபட்டினம் பகுதியில் மினி கிளினிக்
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரிவாசு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கு. ராசாமணி, சார் ஆட்சியர் வைத்தியநாதன் மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார் உள்பட அரசு அலுவலர்களும், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details