தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் அதிநவீன ஆவின் பால் சேமிப்பு கிடங்கு: தொடங்கிவைத்த அமைச்சர்

கோவை: ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான அதிநவீன ஆவின் பால் சேமிப்பு கிடங்கு கட்டடத்திற்கான பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கிவைத்தார்.

கோவையில் அதிநவீன பால் கட்டட பூமி பூஜையை தொடங்கி வைத்த அமைச்சர்!
கோவையில் அதிநவீன பால் கட்டட பூமி பூஜையை தொடங்கி வைத்த அமைச்சர்!

By

Published : Aug 1, 2020, 2:39 AM IST

கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பகுதியில் ஆவின் நிறுவன தயாரிப்புப் பொருள்களை வைக்க மொத்த சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த இடத்திலிருந்தே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஆவின் பால் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன.

இதனையடுத்து இங்குள்ள மிகவும் பழமையான கட்டடங்களைப் புதுப்பிக்க வேண்டும் அல்லது இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்நிலையில், பழைய கட்டடங்களை இடித்துவிட்டு, புதிதாக ஆவின் பாலக விற்பனை நிலையம் கட்டடம் கட்டுவதற்கு ஒரு கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகளைத் தொடங்குவதற்கு பூமிபூஜை இன்று (ஜூலை31) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை ஆவின் பாலக தலைவர் கே.பி. ராஜூ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க...பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை அதிமுக அரசும், பாஜகவும் காப்பது ஏன்? இந்திய மாதர் சங்கம் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details