தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச் சேகரிப்பின்போது நடனமாடிய எஸ்.பி. வேலுமணி - பழங்குடியினருடன் நடனமாடிய எஸ்.பி.வேலுமணி

கோவை: மலைவாழ் கிராமத்தில் தனக்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மக்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடினார்.

minister S.P Velumani dancing with the tribesmen to collect votes at covai
minister S.P Velumani dancing with the tribesmen to collect votes at covai

By

Published : Mar 29, 2021, 2:51 PM IST

கோவை மாவட்டத்திற்குள்பட்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்தல் நெருங்குவதால் தனக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் மக்களைக் கவரும் வகையில் பல வித்தியாசமான முறைகளைப் பின்பற்றி வாக்குச் சேகரித்துவருகின்றனர்.

இதற்கிடையில், இன்று அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தில் தனக்காக வாக்குச் சேகரிக்கச் சென்ற அமைச்சர் வேலுமணி, அங்குள்ள மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசைக்குத் தகுந்தாற்போல நடனமாடினார். அவருடன் இணைந்து கிராம மக்கள் பலரும் உற்சாகத்துடன் நடனமாடினர்.

பழங்குடியினருடன் நடனமாடிய எஸ்.பி. வேலுமணி

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்ந்து மூன்றாவது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details