கோயம்புத்தூர்: திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 44ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கோவை பீளமேடு பகுதியில் ஒருங்கிணைந்த திமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியை செந்தில்பாலாஜி பேட்டிங் செய்து தொடங்கிவைத்தார். மேலும் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகளையும் தெருவித்தார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், கோவை மாவட்ட பள்ளி, கல்லூரிகளிலிருந்து இனி வேறு மாவட்டம், மாநிலத்திற்கு விளையாட்டுப் போட்டியில் பங்குபெறும் வீரர், வீராங்கனைகள் சென்று வரும் செலவினங்களை ஒருங்கிணைந்த திமுக ஏற்றுக்கொள்ளும் என உறுதியளித்துள்ளார்.