கோயம்புத்தூர்: உக்கடம் புல்லுக்காடு பகுதியில் அமைந்துள்ள குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை அழகு படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சி 'ஸ்ட்ரீட் ஆர்ட்' என்ற அமைப்புடன் இணைந்து கட்டடங்களில் அழகிய ஓவியங்கள் வரைந்து வருகிறது. கோவையில் இந்த அமைப்பின் சார்பில், வரையப்பட்ட ஓவியங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் உக்கடம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளுக்கான, ஓவியப்பயிற்சி மற்றும் போட்டி நடைபெற்றது. இதில் சிறந்த ஓவியம் வரைந்தவர்களுக்கு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார்.