கோயம்புத்தூர்பீளமேடு சாலை 'நவ இந்தியா' பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த செயற்குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தொழிலில் தமிழ்நாட்டின் தலைநகராக கோயம்புத்தூர் விளங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
விமான நிலைய விரிவாக்கத்திற்கு 3 மாதங்களில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும். நாடாளுமன்றத் தேர்தலைக் கவனத்தில் வைத்து கொண்டு தொண்டர்கள் செயல்படவேண்டும். உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டும். கலைஞரின் பிறந்தநாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். அது மக்களுக்குப் பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்கி தெருமுனைக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும்.