தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோயில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான சூழல் இனி இல்லை - அமைச்சர் சேகர்பாபு - கோவை அண்மைச் செய்திகள்

கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான சூழல் இனி இல்லை என மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள கோயில்களில் ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

கோயில் யானைகள்
கோயில் யானைகள்

By

Published : Jul 24, 2021, 10:49 PM IST

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபத்திர காளியம்மன் திருக்கோயில், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகியவற்றில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (ஜூலை 24) ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், "இதுவரை கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்பட்ட ஆய்வில், கோயில் திருப்பணிகளில் நாட்டம் இல்லாத பரம்பரை அறங்காவலர்களால் பணிகள் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, கோயில் திருப்பணிகள் விரைவுபடுத்தப்படும்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு

கோயில் குடமுழுக்கு பணிகளும் நடைபெறும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் ஆட்சிக் காலம், ஆன்மீகவாதிகளின் பொற்காலம் என பாராட்டும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை செயலாற்றும்” என்றார்.

புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான சூழல் இனி இல்லை

அப்போது மேட்டுப்பாளையத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த யானைகள் நலவாழ்வு முகாம், இந்த ஆண்டும் நடைபெறுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மேட்டுப்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ள கோயில்களை பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் சேகர்பாபு

இதுகுறித்து அவர் பேசுகையில், “கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாமை பொறுத்தவரை, கடந்த காலங்களில் இருந்த நிலையும், தற்போதைய நிலையும் வேறு. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வைத்து பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கு, அந்தந்த கோயில்களிலேயே புத்துணர்வு பெறவும், ஆரோக்கியமாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதோடு, யானைகள் கோயில்களிலேயே குளிக்க பிரத்யேக குளியல் தொட்டிகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் நடத்துவதற்கான சூழல் இனி இல்லை” என்றார்.

இதையும் படிங்க:பாஜக மாநில தலைவர் அண்ணாமலை(யார்) கோயிலில் தரிசனம்

ABOUT THE AUTHOR

...view details