தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு - கோவை வெள்ளியங்கிரி கோயில்

வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் மலைப்பாதை அமைக்கும் பணிகளுக்கான சாத்தியக்கூறுகளை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 22) ஆய்வு செய்தார்.

வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு
வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு

By

Published : May 22, 2022, 9:09 PM IST

கோயம்புத்தூர்:கடந்த சட்டப்பேரவை மானிய கோரிக்கையின்போது மலைக்கோயில்களில் மலைப்பாதை அமைக்கும் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை பருவதமலை மல்லிகார்ஜூனேசுவரர் கோயில், போளூர் லட்சுமி நரசிம்மர் கோயில், கோவை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில், மதுரை சுந்தர மகாலிங்க சுவாமி கோயில், தேனி கண்ணகி கோயில் ஆகிய கோயில்களில் மலைப்பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு

அறிவிப்பின் முதல் கட்டமாக கோயம்புத்தூர் மாவட்டம் பூண்டி அருகிலுள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் மலைப் பாதை அமைக்கும் பணிக்கான சாத்தியக்கூறுகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (மே 22) நேரில் ஆய்வு செய்தார்.

வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு

சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து இதற்கு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார். முன்னதாக கோயிலுக்குச் சென்ற அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலில் உள்ள வசதிகளையும் தேவைகளையும் கோயில் நிர்வாகத்தினரிடம், பக்தர்களிடமும் கேட்டறிந்தார்.

வெள்ளியங்கிரி மலையில் அமைச்சர் சேகர்பாபு

இந்த ஆய்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கூடுதல் ஆணையர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க:வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போல முதலமைச்சரின் செயல்கள் உள்ளன - அண்ணாமலை கிண்டல் பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details