கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட தெலுங்கு பாளையம், செல்வபுரம் பகுதிகளில் அத்தொகுதி சட்டபேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏதேனும் குறைகள் இருக்கிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
தடுப்பூசி போடும் பணிகளை ஆய்வு செய்த அதிமுக எம்.எல்.ஏ - Coimbatore District News
கோவை தொண்டாமுத்தூர் சட்டபேரவை தொகுதியில் நடைபெறும் தடுப்பூசி போடும் பணியை சட்டபேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி நேரில் ஆய்வு செய்தார்.
தடுப்பூசி கிடைப்பதற்கு ஆவன செய்வதாக, அங்கிருந்த மக்களிடமும் மருத்துவர்களிடமும் உறுதியளித்தார். இந்த பேரிடர்காலத்தில் பணியாற்றி வரும், மருத்துவர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அவர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசம், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கி, அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க:'தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு' - வைகோ