கோயம்புத்தூர்: வரதராஜபுரத்தில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் பராமரிப்பு பணிகளை அமைச்சர் சக்கரபாணி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர், களை பறித்து ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து நீலிகோணம்பாளையம், சித்தாபுதூர் பகுதிகளில் புதிதாக நியாயவிலைக் கடையை உணவு, உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். அப்போது புதிதாக ஐந்து நபர்களுக்கு குடும்ப அரிசி அட்டையும் வழங்கினார்.
அதற்கு முன்னதாக தனியார் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
ஒன்றிய அரசிடமிருந்து அதிகமாக கரோனா தடுப்பூசி மருந்துகளை பெற்று தமிழ்நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றிய அரசு கொடுக்கும் தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரித்து அதனை அனைத்து வட்டங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது