தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறும்’ - அமைச்சர் ராதாகிருஷ்ணன் - யானைகள் புத்துணர்வு முகாம்

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் நடத்தும் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெறவுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்
மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்

By

Published : Feb 2, 2021, 8:38 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கஞ்சம்பட்டி, சமத்தூர், கோமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மிதிவண்டிகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு நடத்தும் யானைகள் புத்துணர்வு முகாம் விரைவில் மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெறவுள்ளது. பறவைக் காய்ச்சல் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பரவாமல் இருக்க புயல் வேகத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது.

இதனைக் கட்டுப்படுத்த 26 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பட்டுவருகின்றன. பறவைக்காய்ச்சல் முற்றிலும் ஒழிப்பதற்காகத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர் ராதாகிருஷ்ணன்

உடுமலை அருகே பண்ணைக் கிணறு பகுதியில் அமையவுள்ள கால்நடைப் பூங்கா, ஆராய்ச்சி மையத்திற்கு தகுந்த இடம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இந்நிகழ்வில், உதவி ஆட்சியர் வைத்தியநாதன், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: சசிகலா வருகை: கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details