தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத் தொகை வழங்கல் - அமைச்சர் ஆர். சக்கரபாணி - coimbatore latest news

விவசாயிகளின் நன்மை கருதி கரும்புக்கு ரூ.200 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஆர். சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி தொடர்பான காணொலி
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி தொடர்பான காணொலி

By

Published : Oct 25, 2021, 6:25 AM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் பசுமை, எலக்ட்ரிக்கல் வாகனங்களின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்பார்க் ஈ.வி., எனும் தனியார் நிறுவனத்தால் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் உணவு, பொது விநியோகத்துறை அமைச்சர் ஆர். சக்கரபாணி கலந்து கொண்டு பசுமை புகை இல்ல வாகன அணிவகுப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலின்போது குடும்ப அட்டை விண்ணப்பிப்போர் அனைவருக்கும் 15 நாள்களுக்குள் குடும்ப அட்டை கிடைக்கும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக விண்ணப்பித்த 7 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி தொடர்பான காணொலி

நெல் கொள்முதல் விலை உயர்வு

நியாயவிலை கடைகளில் மளிகைப் பொருள்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளன. முன்னர் விவசாயிகளின் நெல் குவிண்டாலுக்கு ஆயிரத்து 960 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் குவிண்டாலுக்கான நெல் கொள்முதல் விலை ரூ. 100 உயர்த்தப்பட்டு, ரூ. 2ஆயிரத்து 60க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

இதில் முன்னர் புது வகை நெல் குவிண்டாலுக்கு ஆயிரத்து 940 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதற்கான கொள்முதல் விலை ரூ. 75 உயர்த்தப்பட்டு, ரூ. 2 ஆயிரத்து 15க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கரும்புக்கான கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதுடன், நிலுவைத் தொகையான ரூ.200 கோடி வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் பனைவெல்லம் தர ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்பார்க் ஈ.வி., நிறுவன நிர்வாகிகள் பிரவீன் அருண் பிரசாத், தொழிலதிபர் நித்தியானந்தம், திமுக நகர செயலாளர் வடுகை பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திமுக தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை - ஓ பன்னீர்செல்வம்

ABOUT THE AUTHOR

...view details