கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தலைமை தாங்கினார். அவருடன் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "கரோனா நிதி ஒரு சிலருக்கு மட்டும் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அது இந்த மாத இறுதிக்குள் வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயிர் கடன் கடந்த ஆண்டு ரூ.9,500 கோடி மட்டுமே வழங்கிய நிலையில், இந்தாண்டு ரூ.11,500 கோடி பயிர் கடனை வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சேல்ஸ் மேன், பேக்கர்ஸ் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்துள்ளது. நியாய விலை கடைகளில் உள்ள காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.