கோயம்புத்தூர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "திமுக அரசில் மக்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. ஜவுளித் தொழில் நலிவடையும் சூழலுக்கு காரணம் திமுக கொண்டு வந்த மின் கட்டண உயர்வு தான்.
வீடுகளுக்கும் 3 மடங்கு மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். ஜவுளித்துறை வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஏற்கனவே வேங்கை வயல் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து இருந்து இருந்தால் நெல்லையில் வன்கொடுமை சம்பவம் நடந்து இருக்காது. பொருளாதாரம் குறைவாக உள்ளது என்று ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தாக்கி கொள்கிறார்கள்.
யாருக்கும் பாதுகாப்பு இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 1000க்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை நீக்கி தொழில் துறையினருக்கு ஆதரவான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பாஜகவினர் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் இன்னும் வேகமாக வேலை செய்வார்கள். அனுப்பும் கோப்புகளுக்கு எல்லாம் கண்ணை மூடி கை எழுத்து போடுவது ஆளுநர் வேலை இல்லை.