கோயம்புத்தூர்:கோயம்புத்தூரில் காருண்யா பல்கலைக்கழகம் சார்பில் மலை கிராம மக்களுக்கு நிவாரணப் பொருள்கள், நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், 500 மலை கிராம மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்.
திமுக ஆட்சியில் முக்கிய திட்டங்கள் :
அதனைத் தொடர்ந்து சீஷா மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “தொற்று காலத்தில் தடுப்பூசி மிக அவசியமான ஒன்று. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மலைவாழ் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய வனத் துறை அமைச்சர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் தான் பல்வேறு முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. மிக நெருக்கடியான காலத்தில் தமிழ்நாடு இருந்தபோது முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அதன் பின்னர் அயராது பல்வேறு பணிகளை செய்து வருகிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரம் என்று இருந்த நிலையில். தற்போது குறைந்துள்ளது” என தெரிவித்தார்.
சிறுவாணி அணையை ஆய்வு செய்த அமைச்சர்:
அதனைத் தொடர்ந்து நண்டாந்துரை தடுப்பணையை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் , பின்னர் சிறுவாணி அணையை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “கோவை தொண்டாமுத்தூர் நண்டாந்துறை தடுப்பணையிலுள்ள வண்டல் மண்ணை எடுப்பதற்கு சில பிரச்னைகள் உள்ளதாக புகார் எழுந்த நிலையில் அதுகுறித்து ஆலோசித்தேன். அங்குள்ள ‘சிறு துளி’ என்ற அமைப்பு வண்டல் மண்ணை எடுத்து மக்களுக்கு வழங்கி வருவதாக தெரிந்தது. அது மிகவும் நல்ல செயலே. அதனைத் தொடர்ந்து சிறுவாணி அணையில் ஆய்வு மேற்கொண்டேன். ” என்றார்.
பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பரப்புரையில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் கோவை மாவட்டத்தில் முதல்கட்டமாக 100 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டதற்கான ஒப்புகைச் சான்றிதழை பயனாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாம்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட நடவடிக்கை: அமைச்சர் செஞ்சி மஸ்தான்