கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலக அலுவலகத்தைத் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு செய்தார். அங்குள்ள பால் பொருட்களின் விலை, தயாரிப்பு தேதி ஆகியவற்றையும் சோதனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில், கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் அடிப்படைத் தேவையான பால், காய்கறி, மருத்துவப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழி வகை செய்து வருகிறோம். நேற்று (மே.24) தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டோம்.
ஆவின் பால் அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆய்வு! - Minister Nasar
கோயம்புத்தூர்: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ஆவின் பாலக அலுவலகத்தில் இன்று (மே.25) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவின் பால் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர்!
தற்போது கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆவின் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அறநிலையத்துறையில் ஸ்டாலினின் ஆஹா திட்டம்