தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"மது குடிப்போரை திருத்தினால் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சன்மானம்" - அமைச்சர் முத்துசாமி! - coimbatore news today

மது அருந்த வரும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை கவுன்சிலிங் அழைத்து வந்தால் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

minister-muthusamy-will-reward-the-employees-if-the-alcohol-crisis-is-corrected
அமைச்சர் முத்துசாமி பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 2:23 PM IST

Minister Muthusamy Press Meet

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான உள் விளையாட்டு மைதானம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பில் நெகமம் பகுதியில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சார் ஆட்சியர் பொறுப்பு சுரேஷ், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "பொள்ளாச்சி உட்பட்ட நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் உள் விளையாட்டு மைதானம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இதற்கு அரசு சார்பில் இரண்டரை கோடி பொதுமக்கள் பங்களிப்பு இரண்டரை கோடி என மொத்தம் ஐந்து கோடி மதிப்பீட்டில் இத்திட்டமானது செயல்படுத்தபட்டு வருகிறது. தமிழகத்தில் டாஸ்மார்க் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக தேர்தல் வாக்குறுதியில் அளித்த தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டாலும் மது அருந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், விளம்பரங்கள் மூலமாக இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அரசு மதுபான கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் புதியதாக மது அருந்த வரும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை கவுன்சிலிங் செய்ய அழைத்து வந்தால் டாஸ்மார்க் கடை ஊழியர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான மதுபான கடைகளில் மது அருந்துபவர்களுக்கு ஆலோசனை வழங்கினால் அவர்கள் ஊழியர்களை தாக்க முற்படுவதாக குற்றசாட்டுகள் வருகின்றன. இருப்பினும் அவர்களை திருத்துவது அரசின் கடமை" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

இதையும் படிங்க:பஸ்சில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்களை தாக்கிய நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது

ABOUT THE AUTHOR

...view details